Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, தலைமைத் தேர்வாளராக பாகிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மொஹ்சின் கான், ஆப்கானிஸ்தானின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஆகியோரைத் தாண்டியே பயிற்றுவிப்பாளராக மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டே மிஸ்பா-உல்-ஹக் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக, இன்னொரு முன்னாள் அணித்தலைவரும், முன்னாள் பயிற்றுவிப்பாளருமான வக்கார் யூனிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
குறும்பட்டியலிடப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளரும், முன்னாள் வீரருமான மொஹமட் அக்ரம் இறுதி நேரத்தில் பின்வாங்கிக் கொண்டதைத் தொடர்ந்து வக்கார் யூனிஸ் மாத்திரமே நேர்காணலுக்கு முகங்கொடுத்திருந்தார்.
2006-07-இல் பாகிஸ்தானின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டிருந்த வக்கார் யூனிஸ், 2009-10-இல் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்ததுடன், 2010-11 மற்றும் 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தேடியபோதும், விண்ணப்பித்திருந்த முன்னாள் வீரர்களான மொஹமட் வசீம், ஃபைஸல் இக்பாலை குறும்படியலிடவில்லை.
முன்னாள் அணித்தலைவரும் பயிற்றுவிப்பாளருமான இந்திகாப் அலாம், முன்னாள் வீரர் பஸிட் கான், பணிப்பாளர் சபை உறுப்பினர் அசாட் அலி கான், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி வசீம் கான், சர்வதேச கிரிக்கெட்டுக்கான பணிப்பாளர் ஸகிர் கான் ஆகியோரைப் பயன்படுத்தியே பயிற்றுவிப்பாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவுசெய்திருந்தது.
இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரே மிஸ்பா-உல்-ஹக் எதிர்கொள்ளவுள்ள முதலாவது தொடராக அமையவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
3 hours ago