2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

பாகிஸ்தானை வெல்லுமா பங்களாதேஷ்?

Shanmugan Murugavel   / 2025 மே 27 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது லாகூரில் நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்துடனான தொடரில் தோல்வியடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானை வெல்ல வேண்டுமானால் அணித்தலைவர் லிட்டன் தாஸ், தெளஹிட் ஹிரிடோய், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ உள்ளிட்டோரிடமிருந்து தொடர்ச்சியான பெரிய இனிங்ஸ்கள் அவசியமாகின்றன.

காயம் காரணமாக முஸ்தபிசூர் ரஹ்மானும் இல்லாத நிலையில், பனியின்போது ஹஸன் மஹ்மூட், தன்ஸிம் ஹஸன் சகிப் ஆகியோர் பந்துவீசுவதற்கு உடனடியாக கற்றுக் கொள்ள வேண்டியதாகவிருக்கிறது.

மறுபக்கமாக பக்கர் ஸமன், சைம் அயூப் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு வருகின்றமை பாகிஸ்தானுக்கு பலத்தை வழங்குவதுடன், நசீம் ஷா, ஹஸன் அலி, மொஹமட் வஸிமின் மீள்வருகையும் அவ்வணிக்கு பலத்தை வழங்கும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X