2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

Editorial   / 2018 மார்ச் 27 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் குழாமில், அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் திறமைகளை வெளிக்காட்டிய துடுப்பாட்ட வீரர்கள் ஆசிப் அலி, ஹுஸைன் தலாட், வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் குழாமொன்றில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். இவர்கள் தவிர வேகப்பந்துவீச்சாளர்களான றஹாட் அலி, உஸ்மான் கான் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

எவ்வாறெனினும், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் அதிக ஓட்டங்களை அதிரடியாகக் குறித்த கம்ரான் அக்மல் குறித்த குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தத்தமது காயங்களிலிருந்து குணமடைந்திருக்காத சகலதுறை வீரர் இமாட் வஸீம், வேகப்பந்துவீச்சாளர் ருமான் றயீஸ் ஆகியோரும் குழாமில் இடம்பெறவில்லை.

அடுத்த மாதம் முதலாம், இரண்டாம், மூன்றாம் திகதிகளில் இத்தொடரின் போட்டிகள் இடம்பெறவுள்ளன. 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கராச்சியில் இடம்பெறும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர் இதுவாகும்.

குழாம்: அஹமட் ஷெஷாட், பக்கர் ஸமன், பாபர் அஸாம், ஷோய்ப் மலிக், ஆசிப் அலி, சப்ராஸ் அஹமட் (அணித்தலைவர் & விக்கெட் காப்பாளர்), ஹுஸைன் தலாட், பாஹீம் அஷ்ரப், முஹமட் நவாஸ், ஷடாப் கான், மொஹமட் ஆமிர், ஹஸன் அலி, ரஹாட் அலி, உஸ்மான் கான், ஷகீன் அப்ரிடி.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .