Shanmugan Murugavel / 2025 நவம்பர் 11 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு ஒரு நாள் திரும்ப எதிர்பார்ப்பதாக அக்கழகத்தின் முன்னாள் வீரர் லியனல் மெஸ்ஸி திங்கட்கிழமை (10) தெரிவித்துள்ளார்.
பார்சிலோனாவில் 13ஆவது வயதில் இணைந்து 21 ஆண்டுகள் இருந்த 38 வயதான மெஸ்ஸி புதிய அரங்கத்துக்கு விஜயம் செய்த பின்னரே இக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மெஸ்ஸியைத் தக்க வைக்கக் கூடிய நிதி நிலைமையை பார்சிலோனா கொண்டிருக்காத நிலையில் 2021ஆம் ஆண்டு பார்சிலோனாவிலிருந்து வெளியேறிருந்தார்.
வீரரொருவராக ஒருபோதும் செய்ய முடிந்திருக்காத பிரியாவிடையை மாத்திரம் சொல்வதற்காக மட்டுமன்றி ஒருநாள் தான் திரும்புவேன் என நம்புவதாக மெஸ்ஸி கூறியுள்ளார்.
ஐ. அமெரிக்க மேஜர் லீக் சொக்கர் கழகமான இன்டர் மியாமியுடன் 2028ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தை மெஸ்ஸி கொண்டிருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .