Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் புள்ளிகளில், உலகின் தோன்றிய தலைசிறந்த துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் சேர் டொன் பிரட்மனை எப்போதுமில்லாதளவுக்கு, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் நெருங்கியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஏற்கெனவே முதலிடத்திலிருந்த ஸ்டீவ் ஸ்மித், இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் 239 ஓட்டங்களைப் பெற்று ஆஷஸை அவுஸ்திரேலியா மீளக்கைப்பற்ற துணை புரிந்ததுடன், இரண்டாவது போட்டிக்கு பின்னர் காணப்பட்ட தனது 938 தரவரிசைப் புள்ளிகளை 945 புள்ளிகளாக அதிகரித்துக் கொண்டார்.
அந்தவகையில், ஆஷஸின் முதலாவது போட்டிக்குப் பின்னர் காணப்பட்ட 941 என்ற தனது அதியுயர் புள்ளிகளைத் தகர்த்த ஸ்டீவ் ஸ்மித், வரலாற்றில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் பட்டியலில், இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான லென் ஹட்டனுடன் இரண்டாமிடத்தை பகர்ந்துள்ளதுடன், தனக்கு முன்னர் 961 புள்ளிகளுடன் காணப்படும் டொன் பிரட்மனை மாத்திரமே கொண்டுள்ளார்.
இதேவேளை, டொன் பிரட்மனின் 99.94 என்ற சராசரிக்கு அடுத்ததாக, ஸ்டீன் ஸ்மித் தற்போது கொண்டுள்ள 62.32 என்ற சராசரியே, ஆகக் குறைந்தது 20 இனிங்ஸாவது விளையாடியவர்களில் உயர்ந்ததாகக் காணப்படுகிறது.
ஸ்டீவ் ஸ்மித், தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள இந்திய அணியின் தலைவர் விராத் கோலியை விட 52 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளார். முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் வரிசை பின்வருமாறு,
இதேவேளை, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார். ஆஷஸின் மூன்றாவது டெஸ்டி எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜொஷ் ஹேசில்வூட் ஒரு இடம் முன்னேறி ஐந்தாமிடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் வரிசை பின்வருமாறு
8 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
51 minute ago