Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 02 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முதல்நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா வெளியேற்றப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பித்த இத்தொடரில், நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியுடனேயே ஜப்பானின் நயோமொ ஒஸாகா வெளியேற்றப்பட்டுள்ளார். செக் குடியரசின் கட்டெரினா சினியாகோவாவை இப்போட்டியில் எதிர்கொண்ட நயோமி ஒஸாகா, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் தோற்று வெளியேறினார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 2-6, 5-7 என்ற நேர் செட்களில் சக ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனினிடம் தோற்று உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், உக்ரேனின் லெசியா சுரேன்கோவை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனும், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் அன்ட்ரியா பெட்கோவிச்சை எதிர்கொண்ட உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் சல்வோத் ரே கருஸோவை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஆர்ஜென்டீனாவின் பப்லோ கொய்வாஸை எதிர்கொண்ட உலகின் நான்காம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், 6-3, 4-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், சேர்பியாவின் டுஸன் லஜோவிச்சை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-4, 6-2, 4-6, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று முடிவுக்கு தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் சேர்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை எதிர்கொண்ட உலகின் ஆறாம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 7-5, 6-3, 6-7 (5-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், அவுஸ்திரேலியாவின் ஜோர்டான் தொம்ஸனை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம் நிலை வீரரான ஜுவான் மார்டின் டெல் போத்ரோ, 6-4, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
14 minute ago
35 minute ago