2025 ஜூலை 12, சனிக்கிழமை

பிறைட்டனை வென்றது லிவர்பூல்

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியுடனான போட்டியில் லிவர்பூல் வென்றிருந்தது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் 23ஆவது நிமிடத்தில், சாடியோ மனேயிடமிருந்து பெற்ற பந்தை மொஹமட் சாலா கோலாக்கியதோடு இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியை லிவர்பூல் வென்றிருந்தது.

மொஹமட் சாலா பெற்ற கோல் தவிர, சாடியோ மனேயின் உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியில் சென்றிருந்ததுடன், றொபேர்ட்டோ பெர்மினோவின் உதையை பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் கோல் காப்பாளர் மற் றயன் தடுத்திருந்ததுடன், ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் பிறீ கிக் கோல் கம்பத்தில் முட்டியமை உள்ளிட்ட கோல் பெறும் வாய்ப்புகளை லிவர்பூல் கொண்டிருந்தது.

இதேவேளை, வோல்வர்ஹம்ப்டன் வொன்டரரேர்ஸ் அணியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்சஸ்டர் சிற்றி சமநிலையில் முடித்துக் கொண்டிருந்தது. மன்சஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை அய்மரிக் லபோர்ட்டே பெற்றிருந்ததுடன், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரரேர்ஸ் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை விலி போலி பெற்றிருந்தார். விலி போலி பெற்ற கோலானது, ஜோவா மோட்டின்யோவின் பிறீ கிக் அவரது கையில் பட்டே கோலாகியிருந்தபோதும் அதை மத்தியஸ்தர் கண்டியிருக்கவில்லை.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, நாச்சோ மொன்றியல், டனி வெல்பக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. வெஸ்ட் ஹாம் யுனைட்டட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ அர்னோவிச் பெற்றிருந்தார்.

குறித்த போட்டிக்கான குழாமில் மெசுட் ஏஸில் இடம்பெற்றிருக்காத நிலையில், விளையாடும் ஆரம்ப 11 பேர் அணியில் இல்லாததைக் கண்ணுற்ற அவர் மாற்று வீரராக இடம்பெற்றமையைத் தொடர்ந்து முகாமையாளர் உனய் எம்ரேயுடன் முரண்பட்ட பின்னரே குழாமில் இடம்பெறவில்லை என்பதை மறுத்துள்ள எம்ரே, அவருக்கு உபாதையெனக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .