Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 16 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிப் பாதுகாப்பு உலகத் தொடர் என அழைக்கப்படவுள்ள வீதிப் பாதுகாப்பை முன்னெடுக்கவுள்ள இருபதுக்கு – 20 தொடரொன்றில் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சச்சின் தென்டுல்கர், இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் பிரயன் லாரா, தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜக் கலிஸ், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிரட் லீ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவின் மும்பையில் அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இத்தொடரின் முதலாவது பருவகாலத்தில் இந்தியா லெஜன்ட்ஸ், அவுஸ்திரேலியா லெஜன்ட்ஸ், தென்னாபிரிக்கா லெஜன்ட்ஸ், இலங்கை லெஜன்ட்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் லெஜன்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன.
ஓய்வுபெற்ற 110 வீரர்கள் தமது பங்களிப்பை உறுதிப்படுத்தியாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago