2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

முட்டாள்தனமான விடயங்களைச் செய்தேன்: பும்ரா

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 16 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வளர்ந்துவரும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிறிட் பும்ரா, தனது ஆக்ரோஷத்தைக் குறைத்ததன் காரணமாகவே தன்னால் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் அவர், சிம்பாப்வே அணிக்கெதிராக நேற்று முடிவடைந்த ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அத்தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெறுவதற்குப் பங்களித்திருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள பும்ரா, 'கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, மிகவும் ஆக்ரோஷமானவராக நான் இருந்தேன். முட்டாள்தனமான விடயங்களைச் செய்தேன். ஆனால், அதிகமாக விளையாட விளையாட, அமைதியாக இருக்க இருக்க, நான் பந்துவீசுவதற்குச் சிறப்பானது என்பதை உணர்ந்தேன்" எனத் தெரிவித்தார்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், நான்கு விக்கெட் பெறுதிகள் இரண்டையும் கைப்பற்றியிருந்த அவர், 17.2 என்ற 'ஸ்ட்ரைக் றேட்"ஐக் கொண்டிருந்தார். தவிர, ஓர் ஓவருக்குச் சராசரியாக 2.98 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தார.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், 'விக்கெட்டைக் கைப்பற்ற நான் முயன்றபோதெல்லாம், எனக்கு விக்கெட் கிடைக்கவில்லை. ஆகவே தான் நான், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முயல்கிறேன்" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .