Shanmugan Murugavel / 2015 நவம்பர் 11 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் குழாம் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறித்து, தனது மகிழ்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தியதன் காரணமாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பில் சிமன்ஸ், மீண்டும் மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளராக மேற்கிந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பில் சிமோன்ஸ் பொது வெளியில் தெரிவித்த முறையற்ற கருத்துகளுக்கு, அவருக்கு வழங்கப்பட எச்சரிக்கையுடன் கூடிய கடிதம், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடமும் அவரால் குற்றஞ்சாசாட்டப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்களிடமும் பொது மன்னிப்பு கோரியமை ஆகிய இரண்டு விடயதானங்களுடன் நிபந்தனைக்குட்பட்டே, சிமன்ஸ் மீண்டும் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிமன்ஸால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும், ஏதாவது தரப்பு குற்றமிழைத்தமை கண்டுப்பிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையால் இலங்கைத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அணியானது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட முன்னரேயே ஒருநாள் அணிக்கான தெரிவில் வெளியிலிருந்து தலையீடுகள் காணப்படுவதாகவும் தனக்கு சிறந்த ஒருநாள் குழாம் வழங்கப்படவில்லை என சிமன்ஸ் தெரிவித்திருந்தார். தானும், அணித் தலைவர் ஜேஸன் ஹோல்டரும், டுவைன் பிராவோவும், கிரன் பொலார்ட்டும் அணியில் இடம்பெற விரும்பியதாகவும் ஆனால் அவர்கள் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார். தேர்வாளர்களின் தலைவர் கிளைவ் லொயிட்டின் ஆதரவை பிராவோவும் பொலார்ட்டும் பெற்றிருந்ததாகவும் எனினும் வாக்கெடுப்பில் அவர் 3-2 என்ற ரீதியில் தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
லொயிட்டைத் தவிர கொட்னி வோல்ஷ், கொட்னி பிறவுண், எல்டின் பப்டிஸ்டே ஆகியோரே தேர்வுக் குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago