2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை பெண்கள் அணி கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இலங்கை, கிரெனடாவில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மே. தீவுகள்

இலங்கை: 208/10 (47.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: விஷ்மி குணரத்ன 58 (66), ஹர்ஷிதா சமரவிக்கிரம 35 (64), சாமரி அத்தப்பத்து 32 (41), நிலக்‌ஷிகா டி சில்வா 29 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: கரிஷ்மா ரம்ஹரக் 3/26, அஃபி பிளெட்சர் 2/40, ஹேலி மத்தியூஸ் 2/44, ஆலியா அலெய்ன் 1/29)

மே. தீவுகள்: 194/10 (48 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜன்னிலெயா கிளாஸ்கோ 50 (69), ஷெமைன் கம்பெல்லி 30 (35), ஸ்டெஃபனி டெய்லர் 27 (45), அஃபி பிளெட்சர் 20 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுகந்திகா குமாரி 3/38, இனோகா றணவீர 3/44, தேவ்மி விஹங்ஹா 2/33, சாமரி அத்தப்பத்து 1/35)

போட்டியின் நாயகி: விஷ்மி குணரத்ன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X