Shanmugan Murugavel / 2015 நவம்பர் 11 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஜேஸன் ஹோல்டரின் தலைமையில், இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அதே பதினைந்து பேர் கொண்ட குழாமாகவே அறிவிக்கப்படுள்ளது.
நவம்பர் 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகும் மேற்கிந்திய தீவுகள் அணி, பிரிஸ்பேணில் உள்ள அலன் போடர் மைதானத்தில் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பதினொருவர் அணியுடன் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை பயிற்சிப் போட்டியில் பங்கேற்கின்றது.
இதனையடுத்து முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 10ஆம் திகதி ஹோபார்ட்டில் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்து “பொக்ஸிங் டே” டெஸ்ட் போட்டி மெல்போர்னிலும் புது வருட டெஸ்ட் போட்டி சிட்னியிலும் இடம்பெறவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் குழாம்-ஜேஸன் ஹோல்டர் (தலைவர்), கிரேய்க் பிராத்வெயிட் (உப அணித்தலைவர்), தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளக்வூட், கார்லோஸ் பிராத்வெயிட், டரன் பிராவோ, ரஜின்ர சந்திரிகா, ஷேன் டௌரிச், ஷனோன் கப்ரியல், ஷை ஹோப், டினேஷ் ராம்டின், கேமார் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், ஜோமெல் வொரிக்கான்
45 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago