Shanmugan Murugavel / 2015 நவம்பர் 12 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, அத்தொடரை 1-1 என்ற கணக்கில் சமப்படுத்திக் கொண்டது.
கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. டினேஷ் ராம்டின் ஆட்டமிழக்காமல் 34 (22), ஜோன்சன் சார்ள்ஸ் 34 (25), டுவைன் பிராவோ 31 (31), அன்ட்ரே பிளற்சர் 23 (21) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், லசித் மலிங்க 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மிலிந்த சிரிவர்தன 3 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நுவான் குலசேகர, 4 ஓவர்களில் 22 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்தார்.
பதிலளித்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 93 ஓட்டங்களுடன் காணப்பட்ட இலங்கை, அதன் பின்னர் தடுமாறி ஆட்டமிழந்தது. திலகரட்ண டில்ஷான் 52 (38), ஷெஹான் ஜெயசூரிய 30 (32) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் டுவைன் பிராவோ, 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ரவி ராம்போல் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக டுவைன் பிராவோவும் தொடரின் நாயகனாக திலகரட்ண டில்ஷானும் தெரிவாகினர்.
இலங்கைக்கெதிரான டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களை இழந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இத்தொடரில் பெற்றுக்கொண்ட ஒரே வெற்றியாக, இப்போட்டியே அமைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .