2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

மட்ரிட்டில் தொடர விரும்பும் வினிஷியஸ்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 22 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு கடினமாக இருந்தது என்பதை ஏற்றுக் கொண்ட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான வினிஷியஸ் ஜூனியர்,   2027ஆம் ஆன்டுக்குப் பின்னரும் கழகத்திலேயே தொடர விரும்புவதாகக் கூறியுள்ளார்.

அண்மைய போட்டிகளில் மட்ரிட் இரசிகர்களால் 25 வயதான வினிஷியஸ் கேலி செய்யப்பட்டிருந்தார். மட்ரிட்டின் முன்னாள் முகாமையாளர் ஸ்கெபி அலோன்ஸோ பதவி நீக்கப்பட்டதற்கு வினிஷியஸுக்கும் பங்கிருக்கிறதென அவரின் சில விமர்சகர்கள் நம்புகின்றனர். அலோன்ஸோவுடன் வினிஷியஸ் முரண்பட்டிருந்தார்.

இதேவேளை பேரம்பேசல்கள் நின்றுள்ளபோதும் தனது ஒப்பந்த நீடிப்பு குறித்து தான் கவலையடவில்லை என வினிஷியஸ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X