Shanmugan Murugavel / 2026 மே 04 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

மியாமி குரான் பிறீயில் மெர்சிடீஸ் அணியின் கிமி அன்டொனெல்லி வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த இத்தாலியின் கிமி அன்டொனெல்லி வென்ற நிலையில், பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த நடப்பு போர்மியுலா வண் சம்பியனான லான்டோ நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை ஏழாமிடத்திலிருந்து ஆரம்பித்த நொரிஸின் சக மக்லரன் அணியின் ஒஸ்கார் பியாஸ்திரி மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 100 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அன்டொனெல்லி காணப்படுகின்றார். மெர்சிடீஸ் அணியின் ஜோர்ஜ் ரஸல் 80 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் 59 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் காணப்படுகின்றார்.
34 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
52 minute ago