2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறிய நபி

Mayu   / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபி முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கெதிரான முதலாவது போட்டியில் 136 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையிலேயே நபி இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. சிகண்டர் ராசா, 4. ரஷீட்
கான், 5. அசாட் வலா

இதேவேளை பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை நபி அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. கேஷவ் மஹராஜ், 2. ஜொஷ் ஹேசில்வூட், 3. அடம் ஸாம்பா, 4. மொஹமட் சிராஜ், 5. ஜஸ்பிரிட் பும்ரா, 6. ரஷீட் கான், 7. மொஹமட் நபி, 8. ஷகீன் ஷா அஃப்ரிடி, 9. குல்தீப் யாதவ், 10. ட்ரெண்ட் போல்ட்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. பாபர் அஸாம், 2. ஷுப்மன் கில், 3. விராட் கோலி, 4. றோஹித் ஷர்மா, 5. டரைல் மிற்செல், 6. டேவிட் வோர்னர், ஹரி டெக்டர், 8. டேவிட் மலன், 9. றஸி வான் டரி டுஸன், 10. ஹென்றிச் கிளாசென்.

இதேவேளை டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நியூசிலாந்தின் கைல் ஜேமிஸன், தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்து 14ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. ககிஸோ றபாடா, 3. இரவிச்சந்திரன் அஷ்வின், 4. பற் கமின்ஸ், 5. ஜொஷ் ஹேசில்வூட், 6. பிரபாத் ஜெயசூரிய, 7. ஜேம்ஸ் அன்டர்சன், 8. கைல் ஜேமிஸன், 9. நேதன் லையன், இரவீந்திர ஜடேஜா, ஒலி றொபின்ஸன்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. கேன் வில்லியம்சன், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. ஜோ றூட், 4. டரைல் மிற்செல், 5. பாபர் அஸாம், 6. உஸ்மான் கவாஜா, 7. விராட் கோலி, 8. ஹரி ப்ரூக், 9. திமுத் கருணாரத்ன. 10. மர்னுஸ் லபுஷைன்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. இரவீந்திர ஜடேஜா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகிப் அல் ஹஸன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. அக்ஸர் பட்டேல்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலிரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. ஷகிப் அல் ஹஸன், 2. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், 3. ஏய்டன் மார்க்ரம், 4. மொஹமட் நபி, 5. சிகண்டர் ராசா.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. சூரியகுமார் யாதவ், 2. பில் ஸோல்ட், 3. மொஹமட் றிஸ்வான், 4. பாபர் அஸாம், 5. ஏய்டன் மார்க்ரம், 6. யஷஸ்வி ஜைஸ்வால், 7. பின் அலென், 8. றீலி றொஸோ, 9. ஜொஸ் பட்லர், 10. றீஸா
ஹென்ட்றிக்ஸ்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. அடில் ரஷீட், 2. மகேஷ் தீக்‌ஷன, 3. வனிடு ஹசரங்க, 4. அகீல் ஹொஸைன், 5. அக்ஸர் பட்டேல், 6. ரவி பிஷ்னோய், 7. தப்ரையாஸ் ஷம்சி, 8. ரஷீட் கான், 9. மிற்செல் சான்ட்னெர், 10. றீஸ் டொப்லி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X