Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் நாளிலேயே, உலகின் முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், முதலாவது சுற்றோடு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நேற்று ஆரம்பித்த இத்தொடரின் தனது முதலாவது சுற்றுப் போட்டியில் எஸ்தோனியாவின் கையா கனேபியை எதிர்கொண்ட ஹலெப், 2-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, நடப்புச் சம்பியனும் உலகின் முதல்நிலை வீரருமான ஸ்பெய்னின் ரபேல் நடால் நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் சக ஸ்பெய்ன் வீரரான டேவிட் பெரரை எதிர்கொண்டு 6-3, 3-4 என்ற ரீதியில் இருந்தபோது காயம் காரணமாக டேவிட் பெரர் போட்டியிலிருந்து விலக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், உலகின் எட்டாம் நிலை வீரரான பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோவ், 3-6, 2-6, 5-7 என்ற நேர் செட்களில் தனது முதலாவது சுற்றுப் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்காவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, நடப்புச் சம்பியனும் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீபன்ஸ், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் எக்னியா றொடினாவை 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
மேற்குறிப்பிடப்பட்ட போட்டிகள் தவிர, நேற்று இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டிகளில் வென்ற உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போத்ரோ, ஐந்தாம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், ஒன்பதாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்ம், உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, எட்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஒன்பதாம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் ஜூலியா ஜோர்ஜஸ் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
6 hours ago