Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 01 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில், ஹராரேயில் இன்று இடம்பெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பக்கர் ஸமன் 61 (40), ஆசிப் அலி ஆட்டமிழக்காமல் 41 (21), ஷொய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 37 (24) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டென்டாய் சிஸோரே 2, கைல் ஜார்விஸ் சமு சிபாபா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 17.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று 74 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், தரிசாய் முசுகண்டா 43 (35), சொலமன் மிரே 27 (29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் நவாஸ், உஸ்மான் கான், மொஹமட் ஹபீஸ், ஹஸன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஆசிப் அலி தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago
46 minute ago
53 minute ago