Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 01 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், தனக்கும் இரண்டாமிடத்திலுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலிக்குமான புள்ளிகள் வித்தியாசத்தை 54 ஆக அதிகரித்துக் கொண்டார்.
அந்தவகையில், தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர் பெறுகின்ற அதிக புள்ளிகளாக 947 புள்ளிகளைப் பெற்று ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலுள்ளார். தரவரிசை மதிப்பீட்டின்படி டொன் பிரட்மனே 961 புள்ளிகளைப் பெற்று அதிக புள்ளிகளைப் பெற்றவராகக் காணப்படுகின்றார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்டின் முதலாவது இனிங்ஸில் ஆட்டமிழக்காமல் 244 ஓட்டங்களைப் பெற்ற அலிஸ்டயர் குக், ஒன்பது இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இதுதவிர, டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட் ஒரு இடம் முன்னேறி, நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனுடன் நான்கமிடத்தைப் பகர்ந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் வரிசை பின்வருமாறு,
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில், தென்னாபிரிக்காவின் மோர்னி மோர்கல், சிம்பாப்வேக்கெதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மூன்று இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களுக்குள் வேறு மாற்றமேதும் நிகழவில்லை.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் வரிசை பின்வருமாறு,
8 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
51 minute ago