Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு ஆர்சனல் முன்னேறியுள்ளது.
தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற நியூகாசில் யுனைட்டெட்டுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு ஆர்சனல் முன்னேறியுள்ளது.
தம் சார்பாக நடப்பு பிறீமியர் லீக் பருவகாலத்தில் அதிக கோல்களைப் பெற்ற முன்கள வீரர் பியரி எம்ரிக் அபுமெயாங்கை மாற்றுவீரராகக் கொண்டு இப்போட்டியை ஆர்சனல் ஆரம்பித்தபோதும், 71 சதவீதமான நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அந்தவகையில், போட்டியின் 12ஆவது நிமிடத்தில் ஆர்சனல் முன்னிலை பெற்றதாகக் கருதப்பட்டபோதும், நியூகாசில் யுனைட்டெட்டின் பின்கள வீரர் ஃபுளோரியன் லெஜியுனேயை விதிமுறைகளை மீறி ஆர்சனலின் பின்கள வீரர் சோக்ரடீஸ் கையாணததாக தீர்மானிக்கப்பட்ட நிலையில், ஆர்சனலின் மத்தியகள வீரரான ஆரோன் றம்சி பெற்ற கோல் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், நியூகாசிலின் பின்கள வீரர் டிஅன்ட்ரே யெட்லின் உதைந்த பந்து, ஆரோன் றம்சியிடன் வந்த நிலையில், போட்டியின் 30ஆவது நிமிடத்தில் அவர் அதைக் கோலாக்க ஆர்சனல் முன்னிலை பெற்றது.
அந்தவகையில், முதற்பாதி முடிவடைவதற்கு முன்பாக தமது முன்னிலையை ஆர்சனல் இரட்டிப்பாக்குவது போல இருந்திருந்து, நியூகாசில் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் மார்ட்டின் டுப்ரவ்காவை ஆர்சனலின் முன்கள வீரர் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரேயின் உதை தாண்டிய போதும், கோல் கம்பத்துக்கு முன்னாலிருந்து நியூகாசில் யுனைட்டெட்டின் முன்கள வீரர் மற் றிச்சி தலையால் முட்டி கோல் பெறப்படுவதை தடுக்க, 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் முன்னிலை பெற்றபடி முதற்பாதி முடிவடைந்தது.
இந்நிலையில், இரண்டாவது பாதியில் கோல் கம்பத்தை நோக்கி சோக்ரடீஸ் தலையால் முட்டிய பந்து, கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்ததுடன், சக முன்கள வீரர் அலெக்ஸ் இவோபிக்கு பதிலாகக் களமிறங்கிய பியரி எம்ரிக் அபுமெயாங்க், கோல் கம்பத்தை நோக்கி உதைந்தடு தடுக்கப்பட்டிருந்தது. எனினும், பியரி எம்ரிக் அபுமெயாங்க் தலையால் முட்டிக் கொடுத்த பந்தை, அவரின் சக முன்கள வீரரான அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே கோலாக்கியதோடு, இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
அந்தவகையிலேயே, 63 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆர்சனல், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகியன தலா 61 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை அடிப்படையில் நான்காம், ஐந்தாம் இடங்களில் காணப்படுகின்றன. 60 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் செல்சி காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago