Editorial / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

2021-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. மூன்றாவது இடம் பிடித்துள்ளார்
முதல் இரண்டு இடங்களில் கால்பந்தாட்ட வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். நெட் கிரெடிட் நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய பயன்பட்டு வருகிறது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம். இது மெட்டா நிறுவனத்தின் வசம் உள்ளது. இதில் பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் பயனர்களாக உள்ளனர். இவர்களில் அதிகம் பின்தொடர்பவர்களை பெற்றவராக போர்ச்சுகல் அணியின் வீரர் ரொனால்டோ உள்ளார்.
மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி உள்ளார். அதிக பின்தொடர்பவர்களை பெற்ற டொப் 20 பயனர்களில் ஒருவராக விராட் கோலியும் உள்ளார்.
அந்த வகையில் இந்த ஸ்பான்சர்ஷிப் பதிவுகள் மூலம் கடந்த 2021-இல் மட்டும் ரொனால்டோ சுமார் 85.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளார். மெஸ்ஸி, 71.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள கோலி, 36.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளார்.
48 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago