2025 ஜூலை 05, சனிக்கிழமை

மூன்றாவது சுற்றுடன் வெளியேறினார் நடப்புச் சம்பியன்

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் இடம்பெற்றுவரும் ஈஸ்ட்போர்ண் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுடன் நடப்புச் சம்பியனான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான அர்யானா சபலெங்காவை எதிர்கொண்ட கரோலின் வொஸ்னியாக்கி, 6-2, 4-6, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸை எதிர்கொண்ட உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் ஜேர்மனியின் அன்னா-லெனா ஃபிறைட்சாமை எதிர்கொண்ட உலகின் நான்காம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் சுவீடனின் றெபெக்கா பீற்றர்ஸனை எதிர்கொண்ட ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், 7-6 (7-4), 6-0 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் ஸ்லோவேனியாவின் பொலொனா ஹெர்கொக்கை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப் 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .