Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 24 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பார்படோஸில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜேஸன் ஹோல்டர் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
இரண்டாவது போட்டியில் பந்தைச் சேதப்படுத்த முயன்றமைக்காக ஒரு டெஸ்ட் தடையைப் பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்ட நிலையில், இப்போட்டியில் இலங்கையணியின் தலைவராக சுரங்க லக்மால் கடைமாற்றியிருந்தார். சந்திமாலுக்குப் பதிலாக தனுஷ்க குணதில அணியில் இடம்பெற்றதோடு, இரண்டாவது டெஸ்டில் விளையாடிய அகில தனஞ்சயவை டில்ருவான் பெரேரா பிரதியீடு செய்தார்.
மேற்கிந்தியத் தீவுகளின் முதலாவது மென்சிவப்பு நிற பந்து பகல் – இரவு டெஸ்டான இப்போட்டியில், இலங்கையணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்காமல் மேற்கிந்தியத் தீவுகள் அணி திணறியது. ஒரு கட்டத்தில் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தபோதும் முதலாவது டெஸ்டிலே மேற்கிந்தியத் தீவுளுக்கு மீட்பர்களாக மாறிய ஷேன் டெளரிச்சும் ஜேஸன் ஹோல்டரும் பிரிக்கப்படாத 79 ஓட்டங்களை பகர்ந்த நிலையில், மேற்கிந்டியத் தீவுகள் அணி, தமது முதலாவது இனிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்றவாறு நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் காணப்படுகிறது.
தற்போது களத்தில், ஷேன் டெளரிச் 60, ஜேஸன் ஹோல்டர் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்படுகின்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால், கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லஹிரு குமார ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago