Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மே 28 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனைத் தடுத்து, அவருடனான இறுதி நேர மோதலொன்றிலிருந்து தப்பி, மெர்சிடிஸின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் வென்றார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த பந்தயத்தின் இறுதிப் பகுதியில், மக்ஸ் வெர்ஸ்டப்பனை விட மிருதுவான டயர்களால் லூயிஸ் ஹமில்டன் தடுமாறியபோதும், கவனமான முகாமைத்துவம் காரணமாக இவ்வாண்டின் தனது நான்காவது வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.
முதலாமிடத்திலிருந்து குறித்த பந்தயத்தை ஆரம்பித்த லூயிஸ் ஹமில்டன், முதலாவது வளைவிலேயே முன்னிலை பெற்றிருந்த நிலையில், சக மெர்சிடிஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ், மக்ஸ் வெர்ஸ்டப்பன், ஃபெராரி அணியின் ஜேர்மனியின் செபஸ்டியன் வெட்டலுக்கு முன்பதாக பந்தயத்தைக் கட்டுப்படுத்தியிருந்தார்.
இப்பந்தயத்தை இரண்டாமிடத்தில் பூர்த்தி செய்தபோதும் ஐந்து செக்கன்கள் தண்டம் காரணமாக, செபஸ்டியன் வெட்டல் இரண்டாமிடத்துக்கு முன்னகர்த்தப்பட்டதோடு, வல்ட்டேரி போத்தாஸ் மூன்றாமிடத்துக்கு முன்னகர்த்தப்பட்ட நிலையில் நான்காமிடத்தையே பெற்றார்.
டயர்களை மாற்றி மீண்டும் பந்தயத்தில் இணைந்து கொள்ளும்போது அபாயகரமாக இணைந்து கொண்டதன் காரணமாகவே மக்ஸ் வெர்ஸ்டப்பனுக்கு ஐந்து செக்கன்கள் தண்டம் கிடைக்கப் பெற்றிருந்தது.
அந்தவகையில், குறித்த பந்தய வெற்றியுடன் இவ்வாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள வல்ட்டேரி போத்தாஸுக்கும், தனக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை 17ஆக லூயிஸ் ஹமில்டன் அதிகரித்துக் கொண்டார். 137 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லூயிஸ் ஹமில்டன் காணப்படுகையில், 120 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் வல்ட்டேரி போத்தாஸ் காணப்படுகின்றார்.
இதேவேளை, 82 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செபஸ்டியன் வெட்டலும், 78 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மக்ஸ் வெர்ஸ்டப்பனும், 57 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் ஃபெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago