Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 29 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய இரண்டாம் தர கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான யுரோப்பா லீக் தொடரின் இறுதிப் போட்டி, அஸார்பைஜான் தலைநகர் பகுவிலுள்ள பகு ஒலிம்பிக் அரங்கத்தில் நாளை அதிகாலை 12.30மணிக்கு ஆரம்பமாகின்றது.
இந்த இறுதிப் போட்டியில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான செல்சியும், ஆர்சனலும் பலப்பரீட்சை நடாத்துகின்றன. இப்போட்டியில் வெல்வதன் மூலம் ஐரோப்பிய முதற்தர கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதிபெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், நடப்பு பருவகால இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடம் பெற்றமை காரணமாக நேரடியாக சம்பியன்ஸ் லீக் தொடருக்கு செல்சி ஏற்கெனவே தகுதிபெற்றுள்ள நிலையில், சம்பியன்ஸ் லீக்குக்கு தாம் தகுதிபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு யுரோப்பா லீக் தொடரில் சம்பியனாக வேண்டிய தேவை ஆர்சனலுக்கு காணப்படுகின்றது.
எவ்வாறெனினும், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படும் தமது நட்சத்திர முன்களவீரர் ஈடின் ஹஸார்ட், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முகாமையாளராகச் செல்கிறார் எனக் கூறப்படும் தமது முகாமையாளர் மெளரிசியோ சரி ஆகியோருக்கு யுரோப்பா லீக் தொடரின் இறுதிப் போட்டியே இறுதி செல்சி போட்டியாக அமையவுள்ள நிலையில், இவர்களுக்கு வெற்றிப் பிரியாவிடை வழங்க செல்சி எதிர்பார்க்கின்றது.
இதுதவிர, கடந்த பருவகாலத்தில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியை சிறப்பாக வழிநடத்தியிருந்தது, நடப்புப் பருவகாலத்தில் சம்பியன்ஸ் லீக் தொடருக்கான நேரடித் தகுதியைப் பெற்றுக் கொண்டிருந்தது போன்ற தகமைகளை மெளரிசியோ சரியோ கொண்டிருந்தாலும் இதுவரை எந்தப் பட்டத்தையும் வெல்லாத நிலையில், அவரும் யுரோப்பா பட்டத்தை வெல்ல நிச்சயம் எதிர்பார்பார்.
மறுபக்கமாக, ஆர்சனலின் முகாமையாளர் உனை எம்ரே, 2014ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டு வரை, ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவுடன் தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் யுரோப்பா லீக்கை வென்ற நிலையில், அந்த அனுபவம் நிச்சயம் ஆர்சனலுக்கு அனுகூலத்தை வழங்குகின்றது.
இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்தில் பருவகாலத்தை செல்சி நிறைவுசெய்தபோதும், முதலாம், இரண்டாம் இடங்களில் பருவகாலத்தை முடிவு செய்த மன்செஸ்டர் சிற்றி, லிவர்பூலை விட 26, 26 புள்ளிகள் பின்தங்கியிருந்ததுடன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பருவகால இறுதியில் மோசமான முடிவுகளாலேயே மூன்றாமிடத்தை செல்சி பெற்றிருந்தது.
ஆக, செல்சியும், ஆர்சனலும் சம பலமுடையமாகவே காணப்படுகின்றன. இரண்டு அணிகளினதும் பின்களங்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவாறு இல்லாத நிலையில், செல்சியில் ஈடின் ஹஸார்ட்டும், ஆர்சனலில் அவ்வணியின் முன்களவீரர் பியரி எம்ரிக் அபுமெயாங்கும் முக்கியமான வீரர்களாக தாக்குதலை நிகழ்த்தக்கூடியவர்களாகக் காணப்படுகின்றனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago