2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யுரோப்பா லீக் தொடர்: ஆர்சனலை வீழ்த்தி சம்பியனானது செல்சி

Editorial   / 2019 மே 31 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுரோப்பா லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி சம்பியனானது. அஸார்பைஜான் தலைநகர் பகுவிலுள்ள பகு ஒலிம்பிக் அரங்கில், நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாம் தர ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான யுரோப்பா லீக் தொடரின் இறுதிப் போட்டியில், சக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலை வீழ்த்தியே செல்சி சம்பியனானது.

இப்போட்டியின் முதற்பாதியில் கோலெதுவும் பெறப்படாத நிலையில், சக பின்களவீரரான எமெர்ஸன் பல்மீரி வழங்கிய பந்தை இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலாக்கிய செல்சியின் முன்களவீரரான ஒலிவர் ஜிரூட், தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்து, அடுத்த 11ஆவது நிமிடத்தில், சக நட்சத்திர முன்களவீரரான ஈடின் ஹஸார்ட் வழங்கிய பந்தைக் கோலாக்கிய செல்சியின் இன்னொரு முன்களவீரரான பெட்ரோ, தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், ஒலிவர் ஜிரூட்டை ஆர்சனலின் மத்தியகளவீரரான ஐன்ஸ்லி மைட்லான்ட்-நைல்ஸ் விதிமுறைகளை மீறிக் கையாண்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பெனால்டியை ஈடின் ஹஸார்ட் கோலாக்க, 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய தமதணியின் முன்களவீரரான அலெக்ஸ் இவோபி பெற்ற கோலின் மூலம் செல்சியின் முன்னிலையை ஒரு கோலால் ஆர்சனல் குறைத்தது.

எவ்வாறெனினும், ஒலிவர் ஜிரூட்டுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த ஈடின் ஹஸார்ட், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் பெற்ற கோலோடு இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .