Editorial / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி உள்ளிட்ட அணிகள் வென்றதுடன், குரோஷியா மற்றும் அஸார்பைஜானுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
ஸ்கொட்லாந்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற அந்நாட்டுடனான குழு ஐ போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, றொமெலு லுக்காக்கு, தோமஸ் வெர்மலென், டொபி அல்டர்வெய்ல்ட், கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை, எஸ்தோனியாவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற அந்நாட்டுடனான குழு சி போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது. நெதர்லாந்து சார்பாக, றயான் பபெல் இரண்டு கோல்களையும், மெம்பிஸ் டிபே, ஜோர்ஜினியோ விஜ்னால்டும் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், வட அயர்லாந்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற அந்நாட்டுடனான குழு சி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. ஜேர்மனி சார்பாக, மார்செல் ஹல்ஸ்டென்பேர்க், சேர்ஜி நர்பி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, அஸார்பைஜானில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற அந்நாட்டுடனான குழு ஈ போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் குரோஷியா முடித்திருந்தது. குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகா மோட்ரிச்சும், அஸார்பைஜான் சார்பாகப் பெறப்பட்ட கோலை தம்கின் காலில்ஸடாவும் பெற்றனர்.
இந்நிலையில், தமது நாட்டில் நேற்று அதிகாலை இடம்பெற்ற ஒஸ்திரியாவுடனான குழு ஜி போட்டியொன்றில் எதுவிதக் கோல்களும் பெறப்படாத நிலையில் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போலந்து முடித்திருந்தது.
34 minute ago
41 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
45 minute ago
1 hours ago