Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 09 , மு.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் நடப்புச் சம்பியன்களான போர்த்துக்கல், உலக சம்பியன்களான பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன வென்றுள்ளன.
சேர்பியாவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சேர்பியாவுடனான குழு பி தகுதிகாண் சுற்றில் 4-2 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றிருந்தது. போர்த்துக்கல் சார்பாக, வில்லியம் கார்வல்ஹோ, கொன்சலோ குயிடஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்ணார்டோ சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சேர்பியா சார்பாக நிக்கொலா மிலென்கோவிச், அலெக்ஸான்டர் மிற்றோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, தமது நாட்டில் நேற்று அதிகாலை இடம்பெற்ற அல்பானியாவுடனான குழு எச் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. பிரான்ஸ் சார்பாக, கிங்ஸ்லி கோமன் இரண்டு கோல்களையும், ஒலிவர் ஜிரூட், நனிடாமோ இகொனே ஒரு கோலையும் பெற்றனர். அல்பானியா சார்பாகப் பெறப்பட்ட கோலை சொகொல் சிகாலெஷி பெற்றார்.
இந்நிலையில், தமது நாட்டில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற பல்கேரியாவுடனான குழு ஏ போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து சார்பாக, ஹரி கேன் மூன்று கோல்களையும், ரஹீம் ஸ்டேர்லிங் ஒரு கோலையும் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
04 Jul 2025