2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ரொஜர் பெடரரும் ஸ்டீபன் எட்பேர்க்கும் பிரிவு

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸ் தரவரிசையில் உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், தனது பயிற்சியாளர் ஸ்டீபன் எட்பேர்க்கிடம் இருந்து இரண்டு வருட இணைப்பின் பின் பிரிந்துள்ளார்.

முப்பத்து நான்கு வயதான பெடரர், இவ்வருட விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க பகிரங்க இறுதிப் போட்டிகளுக்கு வந்திருந்தபோதும் உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சிடம் இரண்டிலும் தோல்வியைத் தளுவியிருந்தார்.

இந்நிலையிலேயே, ஸ்டீபன் எட்பேர்க்குடன் பணி புரிந்தமையானது கனவொன்று நனவாகியதாகவும், அவர் எனது சிறுவயது கதாநாயகன் எனவும் 2014ஆம் ஆண்டு இணைந்த அவர், இவ்வருடமும் நீடிப்பதற்கு சம்மதித்ததுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பெடரர் தெரிவித்தார்.

இதேவேளை பெடரரின் தலைமைப் பயிற்சியாளராக, 2008ஆம் ஆண்டு அவருடன் இணைந்த செவெரின் லூதி நீடிக்கவுள்ளதுடன் அவருடன் இணைந்து இவான் லூஜுபிசி பணியாற்றுவர் என பெடரர் மேலும் தெரிவித்தார். தவிர, உடற்கூற்று நிபுணராக டேனியல் ட்ரோஸ்லரும் தனது நீண்டகால உடற்பயிற்சி நிபுணராக பியரி பகணினியும் நீடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .