Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 14 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் றியோ ஒலிம்பிக்கின் கால்பந்தாட்டத்தின் அரையிறுதிக்கு, பிரேஸில், ஜேர்மனி, ஹொண்டூரஸ், நைஜீரியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
பிரேஸில், கொலம்பியா ஆகிய அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் பிரேஸில் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியின் 12ஆவது நிமிடத்தில் ‘பிறீ கிக்’மூலம் நேமர் ஒரு கோலினைப் பெற்றிருந்தார்.
ஏனைய காலிறுதிப் போட்டிகளில், போர்த்துக்கல்லை 4-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து ஜேர்மனியும், தென்கொரியாவை 1-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து ஹொண்டூரஸும், டென்மார்க்கை 2-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து நைஜீரியாவும் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026