Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் மூன்றாவது தடவையாகவும் ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் மின்னல் கீச்சொன்று வெட்டியது போல, 2008ஆம் ஆண்டு பெய்ஜிங், 2012ஆம் ஆண்டு இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்த உசைன் போல்ட், இடம்பெற்று வரும் றியோ ஒலிம்பிக்கில் ஐக்கிய அமெரிக்காவின் ஜஸ்டின் கட்லினை தோற்கடித்து மூன்றாவது முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இம்முறை வென்ற தங்கப் பதக்கத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் பந்தயத்தில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது வீரர் என தனது பெயரை போல்ட் பதித்துக் கொண்டார்.
29 வயதான போல்ட், பந்தயத் தூரத்தை 9.81 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றதுடன், இரண்டு முறை ஊக்கமருந்து தடை பெற்ற கட்லின், 0.08 செக்கன்கள் அதிகமான நேரத்தை, போட்டித் தூரத்தைக் கடப்பதற்கு எடுத்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். தனது சிறந்த பெறுதியாக 9.91 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த கனடாவின் அன்றே டி கிறாஸ், வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். ஜமைக்காவின் யொஹான் பிளேக் நான்காமிடத்தைப் பிடித்திருந்தார்.
இப்போட்டியில் மெதுவான ஆரம்பத்தையே போல்ட் பெற்ற நிலையில், 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 34 வயதான கட்லின் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், 60 மீற்றர்களிலிருந்து ஜெட் போன்று சீறிச் சென்ற உசைன் போல்ட் வெற்றி பெற்றார்.
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026