2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

றயாவுக்கு மேம்படுத்தப்பட்ட ஒப்பந்தம்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் கோல் காப்பாளர் டேவிட் றயாவுக்கு அவரை முக்கிய வீரரொருவராகக் கோடிட்டுக் காட்டும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு  ஆர்சனலில் நிரந்தரமாக இணையும்போது கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலிருந்து மேற்கூறப்பட்ட ஒப்பந்தமானது ஊதிய அதிகரிப்பு ஆகும்.

ஒப்பந்தமானது பருவகால ஆரம்பத்தில் கைச்சாத்திடப்பட்டபோதும் ஆர்சனலால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

முன்னர் வாரமொன்றுக்கு 100,000 ஸ்டேலிங்க் பவுண்ஸ்களை றயா பெற்றிருந்தார்.

எவ்வாறாயினும் தற்போது காலாவதியாகும் 2028ஆம் ஆண்டு வரையிலேயே புதிய ஒப்பந்தமும் காணப்படுகின்றது. ஒப்பந்தத்தை நீடிப்பதற்கான தெரிவு காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .