Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், பார்சிலோனாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், றியல் சொஸைடட்டுக்குமிடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
பார்சிலோனா சார்பாக, ஜோர்டி அல்பா, பிரெங்கி டி ஜொங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, சொஸைடட் சார்பாகப் பெறப்பட்ட கோலை வில்லியன் ஜொஸே பெற்றிருந்தார்.
இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியலில், அத்லெட்டிகோ மட்ரிட், றியல் சொஸைடட், நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட் ஆகியவை 26 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும், எதிரணிகளுடனான முடிவு மற்றும் கோல் வித்தியாசம் காரணமாக முதலாம், இரண்டாம், மூன்றாமிடங்களில் காணப்படுகின்றன. இதில், அத்லெட்டிகோ 11, சொஸைடட் 14, மட்ரிட் 13 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
34 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
48 minute ago
1 hours ago