2024 மார்ச் 28, வியாழக்கிழமை

றியல் மட்ரிட்டிலிருந்து விலகும் வரான்?

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 15 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டில் இருந்து பின்களவீரரான ரஃபேல் வரான் விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் ஆகியன 28 வயதான வரானைக் கைச்சாத்திட ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பரிஸ் ஸா ஜெர்மைனுக்குச் செல்வதையே வரான் விரும்புகையில், அவரை பரிஸ் ஸா ஜெர்மைன் கைச்சாத்திடுவதற்கு 60 மில்லியன் யூரோக்கள் அளவில் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X