2025 ஜூன் 30, திங்கட்கிழமை

லயோனிடம் தோற்ற பரிஸ் ஸா ஜெர்மைன்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், லயோனுக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது.

லயோன் சார்பாகப் பெறப்பட்ட கோலை தினோ கடெவெரே பெற்றிருந்தார்.

இதேவேளை, லில்லியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், போர்டெக்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லில்லி வென்றிருந்தது. லில்லி சார்பாக, ஜொனதன் பம்பா, ஜொஸே பொன்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, போர்டெக்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொம பஸிச் பெற்றிருந்தார்.

இந்நிலையில், நீஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் றெனிஸுக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நீஸ் தோல்வியடைந்திருந்தது. றெனிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை எம்பயே நியாங்க் பெற்றிருந்தார்.

அந்தவகையில், லீக் 1 புள்ளிகள் பட்டியலில் தலா 29 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் லில்லி முதலாமிடத்திலும், லயோன் இரண்டாமிடத்திலும் காணப்படுகின்றது. 28 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனும், 27 புள்ளிகளுட்டன் நான்காமிடத்தில் மர்ஸெய்யும் காணப்படுகின்றன. குறிப்பிட்ட அணிகளை விட மர்ஸெய் இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X