2025 ஜூலை 17, வியாழக்கிழமை

லா லிகா: வென்றது பார்சிலோனா

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற டெபோர்டிவோ லா கொருனாவுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லூயிஸ் சுவாரஸ், போலின்ஹோ ஆகியோர் தலா 2 கோல்களைப் பெற்றனர்.

இப்போட்டியில், இரண்டு கோல்கள் பெறப்படுவதற்கான வாய்ப்புகளை லியனல் மெஸ்ஸி உருவாக்கியதோடு, லியனல் மெஸ்ஸியின் மூன்று உதைகள் கோல் கம்பத்தில் பட்டுத் திருப்பியிருந்தன. இதுதவிர, பெனால்டியொன்றையும் லியனல் மெஸ்ஸி தவறவிட்டிருந்தார்.

இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 42 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது.  36 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும் 34 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வலென்சியாவும் 31 புல்ளிகளுடன் நான்காமிடத்தில் றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X