Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான றொமேலு லுக்காக்குவை 74 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திட மன்செஸ்டர் யுனைட்டெட்டுடன் இணக்கமொன்றுக்கு இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வந்துள்ளது.
முன்னதாக, பெல்ஜியம் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்களவீரரான றொமெலு லுக்காக்குவை 54 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திடும் இன்டர் மிலனின் கோரிக்கையை கடந்த மாதம் மன்செஸ்டர் யுனைட்டெட் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயிற்சியைத் தவறவிட்டமையைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை 26 வயதான றொமெலு லுக்காக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் அபராதம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது முன்னாள் பெல்ஜியக் கழகமான அன்டர்லெச்சுடன் இணைந்து கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் றொமெலு லுக்காக்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், தனியார் விமானமொன்றிலிருந்து, “பறப்பதற்கு தயாராகவுள்ளோம். இலக்கு மிலானோ” என றொமெலு லுக்காக்குவுடன், தானிருக்கும் புகைப்படத்தை அவரின் முகவர் ஃபெடெரிக்கோ பஸ்டொரெல்லோ இன்ஸ்டாகிராமில் நேற்று முன்தினம் மாலையில் பகர்ந்திருந்தார்.
ஆரம்பத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றனிடமிருந்து கைச்சாத்திட்ட 75 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை மன்செஸ்டர் யுனைட்டெட் றொமெலு லுக்காக்குவுக்காக கோரியிருந்தது.
றொமெலு லுக்காக்குவைக் கைச்சாத்திடுவதற்காக இன்டர் மிலனுடன் இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்காக 96 போட்டிகளில் 42 கோல்களை றொமெலு லுக்காக்கு பெற்றிருந்தாலும் சக முன்களவீரரான மார்க்கஷ் றஷ்ஃபோர்ட்டிடம் தனதிடத்தை அவர் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
52 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
58 minute ago
1 hours ago