Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஏ.சி மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், லேஸியோவுக்குமிடையிலான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் வென்றது.
ஏ.சி மிலன் சார்பாக, அன்டே றெபிச், ஹகன் கல்ஹனொக்லு, தியோ ஹெர்ணான்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லேஸியோ சார்பாக, லூயிஸ் அல்பேர்ட்டோ, சிரோ இம்மொபைலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, நாப்போலியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், டொரினோவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ இன்சீனியா பெற்ற நிலையில், டொரினோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அமன்டோ இஸோ பெற்றிருந்தார்.
இந்நிலையில், பொலொக்னாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியிருந்தது. அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோல்களையும் லூயிஸ் முரியெல் பெற்றிருந்தார். பொலொக்னா சார்பாக, தகெஹிரோ டொமியசு, நெஹுயென் பஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago