Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் வீரர்கள், தமது பாரிய ஊதியத் தொகையை நியாயப்படுத்த வேண்டும் எனவும் பெரிய வீரர்கள் போன்று விளையாட ஆரம்பிக்கவேண்டுமென அவ்வணியின் வீரர் சீஸ்க் பப்ரிகாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பருவகாலத்தில், ஒன்பதாவது தோல்வியை தரவரிசையில் முதலிடத்தில் உள்ள லெய்செஸ்டரிடம் சந்தித்த தற்போதைய சம்பியன்களான செல்சியானது வெளியேற்றப்படும் வலயப் புள்ளிகளை விட ஒரு புள்ளியே அதிகமாகக் கொண்டுள்ளது.
மேற்படி போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, தனது பணிக்கு வீரர்கள் துரோகமிழைப்பதாக செல்சியின் பயிற்சியாளர் மொரின்கோ தெரிவித்ததோடு, வெளியேறும் வலயத்தில் இருப்பதை ஒத்துக் கொள்வதாகவும் ஆனால் வெளியேற்றபடும் மோதல்களில் இருப்பதை ஒத்துக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். தவிர, இங்கிலாந்து பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், முதல் நான்கிடங்களுக்குள் வர முடியாது ஆனால் முதல் ஆறு இடங்களுக்குள் வர முடியும் என தெரிவித்தார்.
இந்நிலையிலேயே, நீங்கள் ஒரு பெரிய வீரராக இருந்தால், பெரிய வீரர் போன்று ஊதியம் வழங்கப்பட்டால் நீங்கள் பெரிய வீரர் போன்று விளையாடவேண்டும் என்றும் பெரிய வீரர் போன்று நடந்து கொள்ள வேண்டும் என சீஸ் பப்ரிகாஸ் தெரிவித்தார்.
நீங்கள் மோசமான பருவகாலத்தையோ மோசமான போட்டியையோ கொண்டிருக்கவில்லை என நான் தெரிவிக்கவில்லை என நான் தெரிவிக்கவில்லை ஆனால் அணுகுமுறையில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .