Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், வலென்சியாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் றியல் மட்ரிட் தோற்றது.
அந்தவகையில், சக மத்தியகளவீரர் கார்லோஸ் சொலருடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த வலென்சியாவின் முன்களவீரர் கொன்கலோ குவைடீஸ் போட்டியின் 35ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் வலென்சியா முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து வலென்சியாவுக்கு கோல் பெறும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்த நிலையில், அவ்வணியின் மத்தியகளவீரரான ஜொஃப்ரி கொன்டொக்பியா கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து உதைந்த உதை, கோல் கம்பத்துக்கு மேலால் சென்றததுடன், அவ்வணியின் முன்களவீரரான றொட்றிகோ கோல் கம்பத்தை நோக்கி செலுத்திய உதை, கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றதுடன், கார்லோஸ் சொலரின் கோல் பெறும் வாய்ப்பை றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் தடுத்திருந்தார்.
இந்நிலையில், சக மத்தியகளவீரரும், அணித்தலைவருமான டேனியல் பரெஜோவின் மூலையுதையை போட்டியின் 83ஆவது நிமிடத்தில் வலென்சியாவின் பின்களவீரரான எஸக்கியல் கரே தலையால் முட்டிக் கோலாக்க அவ்வணி தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியது.
இதேவேளை, போட்டியின் இறுதி நிமிடங்களில் றியல் மட்ரிட்டின் முன்களவீரர் கரிம் பென்ஸீமா தலையால் முட்டிக் கோலொன்றைப் பெற்றபோதும் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வலென்சியா வென்றது. கரிம் பென்ஸீமாவின் கோல் தவிர, வலென்சியாவின் கோல் காப்பாளர் நெட்டோவால் இலகுவாகத் தடுக்கப்பட்ட றியல் மட்ரிட்டின் மத்தியகள வீரர் டொனி க்றூஸ், கோல் கம்பத்திலிருந்து நீண்ட தூரத்திலான உதையொன்றை மட்டுமே இப்போட்டியில் கோல் கம்பத்தை நோக்கி றியல் மட்ரிட் செலுத்தியிருந்தது.
அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் பார்சிலோனா முதலிடத்திலுடம், 62 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இரண்டாமிடத்திலும், 57 புள்ளிகளுடன் றியல் மட்ரிட் மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றன. 47 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் கெட்டாஃபே காணப்படுவதுடன், 46 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் வலென்சியா காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025