Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், வலென்சியாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், செவில்லாவுக்குமிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் செவில்லா வென்றது.
செவில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை சுஸோ பெற்றிருந்தார்.
இந்நிலையில், றியல் வல்லடொலிட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, கிளமென்ட் லெங்லெட், மார்ட்டின் பிறைத்வெய்ட், லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இப்போட்டியில் பெற்ற கோலின் மூலம் பிரேஸில் கழகமான சன்டோஸுக்காக பீலே பெற்ற ஒரே கழகத்துக்கான 643 கோல்கள் என்ற சாதனையை மெஸ்ஸி முறியடித்திருந்தார்.
இதேவேளை, றியல் சொஸைடட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, மரியோ ஹெர்மொஸோ, மார்கோஸ் லொரன்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago