2026 ஜனவரி 17, சனிக்கிழமை

வெளியேற்றப்பட்ட றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 15 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கோப்பா டெல் ரே தொடரிலிருந்து றியல் மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது.

அல்பசெட்டேயின் மைதானத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற அவ்வணியுடனான விலகல் முறையிலான இத்தொடரி இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது.

மட்ரிட் சார்பாக பிராங்கோ மஸ்டடுனோ, கொன்ஸலோ கர்சியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அல்பசெட்டே சார்பாக ஜெஃபெ பெடன்கோர் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஜவி வில்லார் ஒரு கோலைப் பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X