Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இறுதி இரண்டு போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், முதல் மூன்று போட்டிகளுக்கான குழாமில் இடம்பெற்றிருந்த சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜயும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்வும் இடம்பெறவில்லை.
இவர்களுக்குப் பதிலாக, இளம் துடுப்பாட்ட வீரர்கள் பிறித்திவி ஷா, ஹனும விஹாரி ஆகியோர் குழாமில் இடம்பெற்று முதன்முறையாக இந்தியக் குழாமொன்றில் இடம்பிடித்துள்ளனர்.
அந்தவகையில், தனது கடந்த 11 இனிங்ஸிகளில் ஆறு ஒற்றை இலக்கு ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றமையைக் காரணமாகவே 34 வயதான முரளி விஜய் குழாமிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரொருவரை வளர்த்தெடுக்கும் முகமாகவே 18 வயதான பிறித்திவி ஷாவை குழாமில் தேர்வாளர்கள் இணைத்துள்ளார்கள் எனத் தெரிகிறது.
இதேவேளை, இங்கிலாந்தில் தற்போது குளிர்கால நிலையே நிலவுவதால், ஒரு சுழற்பந்துவீச்சாளர் காணுமென்பதாலேயே, இரவீந்திர ஜடேஜாவுக்கு மேலதிகமாக இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராகவிருக்கின்ற குல்தீப் யாதவ் குழாமிலிருந்து நீக்கப்பட்டு, மற்றொரு இளம் துடுப்பாட்ட வீரரான ஹனும விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிகின்றது.
குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், பிறித்திவி ஷா, செட்டேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), ஹர்டிக் பாண்டியா, இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், கருண் நாயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), ஹனும விஹாரி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago