Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 02 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நேற்று ஆரம்பித்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் நாளிலேயே உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா தொடரிலிருந்து முதலாவது சுற்றுடனேயே வெளியேற்றப்பட்டார்.
கஸக்ஸ்தானின் யூனியா புடின்ட்சேவாவை எதிர்கொண்ட ஜப்பானின் நயோமி ஒஸாகா 6-7 (4-7), 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-4, 3-6, 2-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் தோமஸ் ஃபபியானோவை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 4-6, 6-3, 4-6, 7-6 (10-8), 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஜேர்மனியின் பிலிப் கொஷ்னைடரை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனும், உலகின் முதல்நிலை வீரருமான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், ஐந்து தடவைகள் விம்பிள்டன் சம்பியனான ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் 15 வயதான கோரி கெளஃப், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் சீனாவின் ஸு லின்னை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் பெலாரஸின் அலியாக்ஸான்ட்ரா ஸஸ்னோவிச்சை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், அவுஸ்திரேலியாவின் டரியா கவ்ரிலோவாவை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா, 7-5, 6-0 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸின் பியரி-ஹியூகஸ் ஹெர்பேர்ட்டை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்காவின் கொவொன் சூன்-வூவை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம்நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் காஞ்சனோவ் 7-6 (8-6), 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago