Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 09 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுடன் உலகின் முதல்நிலை வீராங்கனையான அஷ்லெய் பார்ட்டி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அலிஸன் றிஸ்கேயை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி 6-3, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் சக செக் குடியரசின் கரோலினா முஷோவாவை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, 6-4, 5-7, 11-13 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் பிரித்தானியாவின் ஜொஹன்னா கொன்டாவை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான பெட்ரா குவிற்றோவா, 6-4, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியிருந்தார்.
இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் கோரி கெளஃப்பை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஸ்பெய்னின் கார்லா சுவாரஸ் நவரோவாவை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸின் உகோ ஹம்பேர்ட்டை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீரரும் நடப்புச் சம்பியனுமான நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் போர்த்துக்கல்லின் ஜோவா சூஸாவை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் மட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் கஸக்ஸ்தானின் மிக்கைல் குகுஷ்கின்னை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago