Editorial / 2017 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் உலக பதினொருவர் கிரிக்கெட் அணி, செப்டெம்பர் 10ஆம் திகதி ஆரம்பித்து, கிரிக்கெட் தொடரொன்றில் விளையாடவுள்ள நிலையில், அந்தத் தொடருக்கு, வீரர்களிடத்தில் அநேகமாக வரவேற்றுக் காணப்பட்டது என, அவ்வணியின் பயிற்றுநர் அன்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடர் தொடர்பாக, வீரர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தியபோதே, இதை உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்த அவர், அவர்களுடனான கலந்துரையாடலில், பாதுகாப்புப் பற்றி விவரங்களே முக்கியமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், பாகிஸ்தானில் இடம்பெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி, பிரச்சினைகள் எவையுமின்றி லாகூரில் இடம்பெற்ற நிலையில், பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு, வீரர்கள் தயாராக இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலக பதினொருவர் குழாம்: ஃபப் டு பிளெஸி (தலைவர்), ஹஷிம் அம்லா, சாமுவேல் பத்ரி, ஜோர்ஜ் பெய்லி, போல் கொலிங்வூட், பென் கட்டிங், கிரான்ட் எலியட், தமிம் இக்பால், டேவிட் மில்லர், மோர்னி மோர்க்கல், டிம் பெய்ன், திஸர பெரேரா, இம்ரான் தாஹிர், டெரன் சமி.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago