Editorial / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் இடம்பெற்றுவரும் பெண்களின் டென்னிஸ் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், நேற்று இடம்பெற்ற வெள்ளைக் குழு போட்டிகளில் நடப்புச் சம்பியனும் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் வென்றனர்.
கரோலின் வொஸ்னியாக்கி, 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவாவை வென்றிருந்தார்.
இந்நிலையில், எலினா ஸ்விட்டோலினா, 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை வென்றிருந்தார்.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago