Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூரில் ஆரம்பமாகியுள்ள உலக டென்னிஸ் சங்க இறுதிப்போட்டிகளின் சிவப்பு குழு ஆரம்ப போட்டிகளில் தரவரிசையில் நான்காமிடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா, தரவரிசையில் இரண்டாமிடத்தில் ரோமானிய வீராங்கனையான சிமோனா ஹலேப் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தொடரின் பட்டத்தை வெல்லக்கூடியவர்களில் முதலாமிடத்தில் காணப்படும் சிமோனா ஹலெப் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் தற்போதைய அமெரிக்க பகிரங்க சம்பியனான தரவரிசையில் எட்டாம் இடத்திலுள்ள இத்தாலியின் பிளாவியா பெனிற்றாவை தோற்கடித்தார்.
மரியா ஷரபோவா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் ஆறாம் இடத்திலுள்ள போலந்து வீராங்கனையான அக்னியன்ஸ்கா ரட்வன்ஸ்காவை தோற்கடித்தார்.
எட்டு வீராங்கனைகளை கொண்ட இத்தொடரில் இரண்டு குழுக்களாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டு, அக்குழுக்களுக்கிடையே ஒவ்வொரு வீராங்கனையும் மற்றைய வீராங்கனைகளுடன் மோதி முதலிரு இடங்களைப் பெறும் வீராங்கனைகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.
உலகின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்திலிருந்து குணமடைந்து வருவதன் காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை.
இந்தத் தொடரின் வெள்ளைக் குழுவில் தரவரிசையில் மூன்றாமிடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கர்பைன் முகுராசா, தரவரிசையில் ஐந்தாம் இடத்திலுள்ள செக் குடியரசு வீராங்கனையான பற்றா கிவிட்டோவா, தரவரிசையில் ஒன்பதாம் இடத்திலுள்ள இன்னுமோர் செக் குடியரசு வீராங்கனையான லூசியே ஸஃபரோபா, தரவரிசையில் ஏழாம் இடத்திலுள்ள ஜெர்மனி வீராங்கனையான அஞ்செலிக் ஹேபர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago