Shanmugan Murugavel / 2015 நவம்பர் 09 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று முடிவுக்கு வந்த அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, நியூசிலாந்தின் மார்க் கிறெய்க் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, அவரை நோக்கிப் பந்தை எறிந்தமைக்காக, அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க்-க்கு, அவரது போட்டி ஊதியத்தின் 50 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி, தனது இரண்டாவது இனிங்ஸின் 84ஆவது ஓவரில், இறுதி பத்தாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மார்க் கிரேய்க், ட்ரெண்ட் போல்ட் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் கிரேய்க் நான்கு ஓட்டங்களுக்கு விளாசிய நிலையில், மூன்றாவது பந்தானது ஸ்டார்க்கை நோக்கிச் சென்றபோதே, அப்பந்தை துடுப்பாட்ட வீரரருக்கு மிக அருகாமையாக எறிந்திருந்தார்.
இந்தச் சம்பவத்தை கவலைக்குரியது என்று வர்ணித்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், இதற்கு முதலும் சில தடவைகள் ஸ்டார்க் இவ்வாறு செய்துள்ளதாகவும் தான் இது பற்றி ஸ்டார்க்குடன் கதைத்தாகவும் தெரிவித்தவேளை, எனினும் இதற்காக அவர் மன்னிப்பு கோரத் தேவையில்லை எனினும், எதிர்காலத்தில் இவ்வாறு செய்யத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
அச்சர்ந்தப்பத்தின் போது ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்யும் சந்தர்ப்பம் காணப்பட்டதாகவும் எனினும் இது வெறுப்பிலேயே இடம்பெற்றதாக தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago