2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஸாகா, ஷஷியை விசாரிக்கின்றது பீபா

Editorial   / 2018 ஜூன் 24 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சேர்பியாவுக்கெதிரான போட்டியில் கோல்களைப் பெற்றவுடன் கிரனிட் ஸாகாவும் கெட்ரான் ஷஷியும் மேற்கொண்ட கொண்டாட்டங்கள் குறித்து உலக கால்பந்தாட்ட சம்மேளனம் (பீபா) விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

குறித்த இரண்டு வீரர்களும் கொஸோவாவைச் சேர்ந்த அல்பானிய இனத்தவர்கள் என்ற நிலையில், கொஸோவாவில் அல்பானியர்களுக்கெதிராக சேர்பியா நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கோல்களைப் பெற்றவுடன், அல்பானிய கொடியில் காணப்படும் இரண்டு தலை கழுகையொத்த சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .